ETV Bharat / city

'சூர்யாவை அவதூறாக பேசுவது அமைச்சர்களுக்கு அழகல்ல..!' - டிடிவி தினகரன் - சூர்யா கருத்து

மதுரை:"நடிகர் சூர்யாவின் கருத்தில் உடன்பாடில்லை என்றால் விட்டு விட வேண்டும். அவரை பற்றி அவதூறாக பேசுவது அமைச்சர்களுக்கு அழகல்ல" என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

suriya
author img

By

Published : Jul 18, 2019, 5:17 PM IST

மதுரையில் அமமுக விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கட்சி பதிவு, சின்னம் குளறுபடி காரணங்களால் வேலூர், நாங்குநேரி தேர்தல்களில் போட்டியிடவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்குள் எங்களது கட்சி பதிவு பணிகள் முடிவடையும் என்பதால் அந்த தேர்தலில் அமமுக போட்டியிடும்.

ஆர்.கே.நகர் தேர்தலில் டொபாசிட் இழந்த திமுக, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஒரு தேர்தலை வைத்து ஒரு கட்சியை முடிவு செய்ய முடியாது. ஒரு தேர்தல் தோல்வியால் அமமுக பின்னடைவு என்பது தவறு. மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தவறான பிம்பத்தை உடைத்து அடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுவோம்.

மதுரையில் பேட்டியளித்த டிடிவி தினகரன்

சூர்யாவின் கருத்தில் உடன்பாடு இல்லாவிடில் அமைச்சர்கள் அவரை அவதூறாக பேசக்கூடாது. சூர்யாவின் கருத்து சரியானது. தமிழ்நாட்டிற்கு எதிரான நீட், மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தடை செய்யாமல் ஆட்சியை காப்பாற்றும் நோக்கிலே அதிமுக அரசு மத்திய அரசோடு இணக்கமாக இருந்து வருகிறது, என்று தெரிவித்தார்.

Intro:ஒரு தேர்தல் தோல்வியால் அமமுக பின்னடைவு என்பது தவறு - டி டி வி தினகரன் பேட்டி

ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே அதிமுக மத்திய அரசோடு இணக்கமாக செல்கின்றனர். லெட்டர் பேடு கட்சி என்று சொல்லிவிட்டு அதிகார ஆசை காட்டி அமமுக நிர்வாகிகளை அழைத்து செல்கின்றனர் என்று டிடிவி தினகரன் பேட்டி
Body:ஒரு தேர்தல் தோல்வியால் அமமுக பின்னடைவு என்பது தவறு - டி டி வி தினகரன் பேட்டி

ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே அதிமுக மத்திய அரசோடு இணக்கமாக செல்கின்றனர். லெட்டர் பேடு கட்சி என்று சொல்லிவிட்டு அதிகார ஆசை காட்டி அமமுக நிர்வாகிகளை அழைத்து செல்கின்றனர் என்று டிடிவி தினகரன் பேட்டி

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, விருதுநகர் மேற்கு மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்திவருகிறேன், உள்ளாட்சி தேர்தலுக்குள் எங்களது கட்சி பதிவு பணிகள் முடிவடையும் என்பதால் போட்டியிடுவோம்.

பொதுமக்கள் மத்தியில் தாங்கள் தனிமைப்படுத்தபட்டதாக தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் சில நிர்வாகிகளை அமைச்சர்கள் அழைத்து செல்கின்றனர். பிம்பத்தை முறியடித்து அமமுக வெற்றி பெறும், ஜனநாயக முறைப்படி வெல்வோம் அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம் ஒரு தேர்தல் தோல்வியால் ஆதரவு குறைந்ததாக எண்ணுவது தவறு.

வேலூர் நாங்குநேரி இடைத்தேர்தல்களில் கட்சி பதிவு இல்லை என்பதால் சின்னம் குளறுபடி ஏற்படும் என்பதால் நிர்வாகிகளின் ஆலோசனைப்படி போட்டியிடவில்லை.

சூர்யாவின் கருத்தில் உடன்பாடு இல்லாவிடில் அமைச்சர்கள் அவரை அவதூறாக பேசக்கூடாது. சூர்யாவின் கருத்து சரியானது, தனது ஆட்சியை காப்பற்ற மட்டும் தான் மத்திய அரசோடு சுமூகமாக செல்கின்றனர். தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்க்க மறுக்கின்றனர். நீட், மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகிய திட்டங்களுக்கு எதிர்ப்பு என்பதே இல்லை, வரும் தேர்தலில் பிரதிபலிக்கும், படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவருவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்,

டெல்லியின் பேச்சுக்கு ஏற்றவாறு அதிமுகவினர் ஆடி வருகின்றனர், சின்னம்மா மீது மரியாதை வைத்திருப்பதாக கூறும் அமைச்சர்கள் ஏன் கர்நாடாகவில் சென்று சந்திக்கவில்லை, அமமுக ஜனநாயகமான கட்சி யார் வேண்டுமானாலும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கலாம் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.