கரோனா தொற்று காரணமாக ரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்பு , தலையணை, கம்பளி போர்வை போன்றவை வழங்குவது நிறுத்தப்பட்டன.
தற்போது கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 1 முதல் மதுரையிலிருந்து புறப்படும் மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் (12638) மற்றும் மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள், தலையணை, கம்பளி போர்வை ஆகியவை வழங்கப்படுகின்றன.
இதேபோல புதுடெல்லி செல்லும்கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், சென்னை -மன்னார் குடி எக்ஸ்பிரஸ், சென்னை -மங்களூரு எக்ஸ்பிரஸ், திருச்சி -ஹவுரா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - ஜம்மு வைஷ்ணவ தேவிகட்ரா ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், ராஜ்யரணி எக்ஸ்பிரஸ்ஆகிய ரயில்களிலும் படுக்கை விரிப்புகள் ஏப்ரல் 1 முதல் வழங்கப்படுகின்றன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
![பாண்டியன் எக்ஸ்பிரஸ் குளிர்சாதனப் பெட்டியில் இன்று முதல் படுக்கை விரிப்பு வழங்கப்படுகிறது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-03-train-ac-compartment-bed-sheets-script-7208110_01042022175215_0104f_1648815735_877.jpg)
இதையும் படிங்க: வினாத்தாள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம்: 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கல்