ETV Bharat / city

சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு: இளைஞருக்கு தூக்குத்தண்டனை உறுதியானது - புதுக்கோட்டை சிறுமி பலாத்கார வழக்கு

சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்தது.

Girl sexual assault case The execution was determined for the youth

author img

By

Published : Jan 12, 2022, 10:42 PM IST

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜா (வயது 26) என்பவர், கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தார்.

இந்த வழக்குத்தொடர்பாக, போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீதான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இவரது தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவது குறித்து உறுதிப்படுத்த காவல் துறை தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு விசாரணை செய்தது.

விசாரணையின்போது அரசு தரப்பில் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்டது சரி என்றும்; அதற்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் எடுத்து வாதடினார்.

இதனைத்தொடர்ந்து கீழமை நீதிமன்றம் முறையான விசாரணை செய்து தூக்குத் தண்டனை வழங்கி உள்ளது.

எனவே, இந்தத் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதை உறுதி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: TNPSC Exams: ஆராய்ச்சி உதவியாளர் எழுத்துத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.