ETV Bharat / city

'உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக செயல்பட வேண்டும்' - மதுரை மாமன்ற உறுப்பினர் விஜயா வேண்டுகோள் - மதுரை மாநகராட்சி

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பணியாற்றுகின்ற 'பெண் மக்கள் பிரதிநிதிகள் எந்தவித கட்டுப்பாடுகளோ, தலையீடுகளோ இன்றி சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்' என்று மதுரை மாநகராட்சியின் 96ஆவது மாமன்ற உறுப்பினர் விஜயா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாமன்ற உறுப்பினர் விஜயா வேண்டுகோள்

author img

By

Published : Mar 27, 2022, 5:08 PM IST

மதுரை: உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் கணவரோ அல்லது சகோதரர்களோ தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து மதுரை மாநகராட்சியின் 96ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் விஜயா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 'உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட காரணத்தால், இன்று தமிழ்நாடு முழுவதும் பெண்கள் உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆண்களுக்கு சமமாக அமர்ந்துள்ளனர். மதுரை மாநகராட்சியின் மேயராக பெண் ஒருவரே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுதந்திரம்: பொதுவுடமைச் சித்தாந்தம் சார்ந்து இயங்குகின்ற எங்களுக்கு, சுய நிர்வாகத் திறமையை கட்சி ஊக்குவித்து வளர்த்து வருகிறது. எந்தவிதமான கட்டுப்பாடோ, தடையோ இன்றி மிக சுதந்திரமாக நாங்கள் இயங்குகிறோம். கட்சி அல்லது குடும்பம் சார்ந்து ஆண்கள் உள்ளிட்ட பிறரின் தலையீடு எங்களுக்கு ஒருபோதும் இல்லை. வார்டு மேம்பாட்டிற்காக வழங்கப்படும் எந்த ஒரு நிதியையும், ஒரு பெண்ணாக நானே கையாள்கிறேன். அதனை முறையாகப் பல்வேறு திட்டங்களில் பகிர்ந்து வழங்குவதில் முழு சுதந்திரம் உள்ளது.

மதுரை மாமன்ற உறுப்பினர் விஜயா வேண்டுகோள்

வேண்டுகோள்: எங்களை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது தேர்வாகியுள்ள அனைத்து மாமன்ற, பேரூராட்சி, நகராட்சி மன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். இதன் மூலம் பொதுமக்களின் பிரச்சனைகளை நேரடியாக ஆய்வு செய்து நிவர்த்தி செய்ய முடியும். தமிழ்நாடு அரசு தற்போது தேர்வாகியுள்ள அனைத்து உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பதை தனிப்பட்ட என்னுடைய வேண்டுகோளாக முன் வைக்கிறேன்.

எங்களது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை தேர்வான அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய பயிற்சியை வழங்கி அவர்களை ஊக்குவிக்கிறது. அதேபோன்று திமுக, அதிமுகவிலும் உள்ள பெண் பிரநிதிநிதிகளுக்கு அந்தந்த கட்சிகள் வழங்க வேண்டும்.

தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் மற்றும் பெண்கள் சார்ந்த சிக்கல்களை என்னைப் போன்ற பெண் மாமன்ற உறுப்பினர்களிடம் எந்தவித மனத்தடைகளும் இன்றி பொதுமக்கள் கூறுகின்றனர். இதில் பாகுபாடு இன்றி அனைத்துக் கட்சி நண்பர்களும், பல்வேறு அமைப்புகளின் நண்பர்களும் என்னை அணுகுகின்றனர். அதனைத் தீர்த்து வைப்பதில் முழு மூச்சுடன் முயன்று மக்கள் பணி செய்து வருகின்றேன். இதே போன்று அனைத்து பெண் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 134ஆவது மாரத்தானை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.