ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே எல்லைகடை எல்பிபி கிளை வாய்க்காலில் பெண் உடல் கிடப்பதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட தகவில், அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கலாம். நிர்வாணமாக உடல் மீட்கப்பட்டுள்ளதால் சந்தேக மரண வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதி சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சர்வதேச நாய்கள் தினத்தில் கர்ப்பமுற்ற நாய் அடித்து கொலை...