ETV Bharat / city

மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனுக்கு மௌன அஞ்சலி - D. Pandian, senior leader of the Communist Party of India

ஈரோடு: மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில் கட்சிப் பாகுபாடு இன்றி ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முதுபெரும் தலைவர் தா பாண்டியனுக்கு மௌன அஞ்சலி

author img

By

Published : Mar 1, 2021, 12:03 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் காலமானதையடுத்து அவரை நினைவுக் கூரும் வகையில் ஈரோட்டில் இன்று மௌன ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலமானது மாவட்ட தலைமை மருத்துவமனையில் தொடங்கி மேட்டூர் சாலை வழியாக வஉசி பூங்கா வரைக்கும் நடைபெற்றது.

முதுபெரும் தலைவர் தா.பாண்டியனுக்கு மௌன அஞ்சலி

இந்த மௌன ஊர்வலத்தில் கட்சி பாகுபாடின்றி அதிமுக, திமுக, பாஜக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஊர்வலத்தின் நிறைவாக வஉசி பூங்காவில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஈரோடு மக்களவை உறுப்பினர் எம்பி கணேசமூர்த்தி, கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பொதுவுடைமைப் போராளி தா. பாண்டியன் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.