சத்தியமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்துவதற்கான 55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம், நீரேற்று நிலையம் போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.
அண்மைக்காலமாகப் பாதாள சாக்கடை தோண்டப்படும் குழிகள் சரிவர மூடப்படாமல் புதை மண்ணாக மாறிவருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் குழியில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. இதனை தடுக்கவேண்டும் என மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு புறப்பட்ட கண்டைனர் லாரி ஒன்று நிர்மலா தியேட்டர் சாலையில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியில் சிக்கி சாய்ந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டது. அங்கு வந்த நெடுஞ்சாலை துறை காவல் துறையினர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.
இதுபோல் பெரும்பாலான சாலைகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சரிவர மூடப்படாமல் வலுவிழந்து காட்சியளிப்பதால் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: 'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களைப் பிடிக்க தனிப்படை...!'