ஈரோடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மூன்றாவது நாளாக இன்றும், காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், மாலை 4 மணியளவில் வானம் கருமேகம் சூழ்ந்திட காற்றில்லாமல் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.