ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்படவில்லை. இதனால் பிரசவம், சாலை விபத்து, பாம்பு கடி உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்காக வருவோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பிரசவ வார்டு மூடக்கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் கே.என்.பாளையம்-கடம்பூர் சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.என்.பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய மருத்துவ வசதி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனையேற்ற மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: பள்ளிவாசலுக்கு அருகே வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு...!