ETV Bharat / city

கோரிக்கையை ஏற்றது தமிழ்நாடு அரசு: மருத்துவ மாணாக்கரின் போராட்டம் வெற்றி! - erode medical college

ஈரோடு: மாணவர்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மாணவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

அரசு மருத்துவ மாணவர்கள்
அரசு மருத்துவ மாணவர்கள்
author img

By

Published : Feb 22, 2021, 8:56 AM IST

Updated : Feb 22, 2021, 9:21 AM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போக்குவரத்துத் துறையின்கீழ் செயல்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின்கீழ் இந்த அரசு மருத்துவக் கல்லூரியை மருத்துவமனையாக மாற்ற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் 13 ஆயிரத்து 610 ரூபாய் கல்விக் கட்டணத்தைவிட, தனியார் மருத்துவக் கல்லூரியில் இருக்கும் நான்கு லட்சம் ரூபாய் கட்டணத்தைப் போன்று பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்பட்டுவந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள் எனத் தமிழ்நாடு அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைவிடுத்தும் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு குறைக்காததன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 15 நாள்களாக வகுப்புகளைப் புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக நேற்று முன்தினம் இரவு (பிப். 20) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் 13 ஆயிரத்து 610 ரூபாய் கல்விக் கட்டணம் இங்கு வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து மாணவர்களின் தொடர் போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாணவர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மருத்துவக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்த பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: யானையை கொடூரமாகத் தாக்கும் பாகன்கள் - பணியிடை நீக்கம் செய்த அரசு

Last Updated : Feb 22, 2021, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.