ETV Bharat / city

தனியார் கல்லூரியில் தகராறு: கல்லூரி மாணவர்களின் வைரல் காணொலி!

author img

By

Published : Nov 27, 2021, 12:26 PM IST

சத்தியமங்கலம் தனியார் கல்லூரி உணவகத்தில் மாணவர்கள் இரு குழுவினராகப் பிரிந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதலால் பரபரப்பு

ஈரோடு: சத்தியமங்கலத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்த கல்லூரியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் கல்லூரி உணவகத்தில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறு கைகலப்பாக மாறி மாணவர்கள் இரு குழுவினராகப் பிரிந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இது குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கல்லூரி மாணவர்களின் வைரல் காணொலி

இதனையடுத்து கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் கல்லூரியில் மாணவர்கள் சண்டையிட்ட காட்சி வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதயநிதி பிறந்தநாள்: வாழ்த்திப் பாடி வரவேற்ற மாணவிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.