ETV Bharat / state

இலங்கை இளைஞர் வீசா நீட்டிப்பு கோரிய வழக்கு: விசாரணை நடத்தி வீசா நீட்டிப்பு வழங்க உத்தரவு! - Sri Lankan Youth Visa Extension

தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்த இலங்கை இளைஞர் வீசா நீட்டிப்பு கோரிய வழக்கில், இலங்கையைச் சார்ந்த மனுதாரரின் திருமணம் முறைப்படி நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தி வீசா நீட்டிப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 7:51 AM IST

மதுரை: இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சரவணபவன் என்ற இளைஞர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் இலங்கை குடியுரிமை கொண்டவன். எனது தாத்தா (அப்பாவினுடைய அப்பா) தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நான் கடந்த மார்ச் 2024ஆம் ஆண்டு மூன்று மாத சுற்றுலா வீசாவில் இந்தியா வந்தேன்.

அதன் பின்னர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசக்தி என்ற இந்தியக் குடியுரிமை உடைய பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இதில் எனக்கு இந்திய ஆதார் அடையாள அட்டை இல்லாததால் எனது திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய முடியவில்லை. இருந்தபோதும் இந்து கலாச்சார முறைப்படி கோயிலில் வைத்து உரிய ஆவணங்களுடன் திருமணம் செய்து கொண்டேன்.

தற்போது எனக்கு மூன்று மாத கால வீசா முடிவடைந்ததால் எனது வீசாவை கால நீட்டிப்பு கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், திருமணத்தை முறையாக சட்டரீதியாக பதிவு செய்த ஆவணங்கள் இல்லாததால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. எனவே, எனது வீசாவை கால நீட்டிப்பு செய்து உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்த சர்ச்சை பேச்சு; விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

இந்த மனுவானது நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதம் அலி, "இந்தியக் குடியுரிமை பெற்ற ஒரு நபரை வெளிநாட்டைச் சேர்ந்தவர் திருமணம் செய்தால் அவருக்கு அதிக பட்ச 5 வருட கால வீசா நீட்டிப்பு செய்து கொடுக்கலாம் என்று ஏற்கனவே இதுபோன்ற வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உள்ளது. எனவே, அதனைப் பின்பற்றி வீசா நீட்டிப்பு வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி சதீஷ்குமார், "ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக உள்ளதால், இலங்கையைச் சேர்ந்த மனுதாரருக்கு முறையாக திருமணம் நடைபெற்றதா என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து, அவருக்கான வீசா நீட்டிப்பை வழங்க வேண்டும். அதுவரையிலும் மனுதாரரை இந்தியாவை விட்டு வெளியேற்ற நடவடிக்கை கூடாது" என உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.