ETV Bharat / city

மக்களை தேடி மருத்துவம் - தாளவாடியில் அமைச்சர் முத்துசாமி தொடங்கிவைப்பு

தாளவாடி மலைப்பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கிவைத்தார்.

erode medical camp
erode medical camp
author img

By

Published : Aug 6, 2021, 7:19 AM IST

ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு மருத்துவம் கிடைக்கும் வகையில் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், "ஈரோடு மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அலுவலர்களும் தாளவாடியில் தற்போது இருக்கின்ற ஆரம்ப சுகாதார மையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்துமாறு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது கூடுதல் வசதிகள் மருத்துவமனையில் கிடைக்கும்.

விரைவாக இத்திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் முதல்கட்டமாக தாளவாடி வட்டாரத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் தாளவாடி வட்டாரத்தில் முதல்கட்டமாக ஆயிரத்து 409 பயனாளிகள் பயன்பெறவுள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: திமுக அரசுக்கு மக்களே அரண் - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.