ETV Bharat / city

கார் ஓட்டும்போது மாரடைப்பு - உயிரிழந்த ஓட்டுநர் - மின்வாரிய ஒப்பந்த கார் ஓடும்போது ஓட்டுநருக்கு மாரடைப்பால் உயிரிழந்தபோது கார் நிலை தடுமாறி மோதியதில் 5 பேர் காயம்

கோபிசெட்டிபாளையத்தில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே ஓட்டுநர் மாரடைப்பால் இறந்து, மேலும் எதிரே வந்த இருவர் விபத்தில் சிக்கி காயமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் ஓட்டும்போதே மாரடைப்பில் உயிரிழந்த சோகம்; விபத்தில் மேலும் 5 பேர் காயம்

கார் விபத்து
கார் விபத்து
author img

By

Published : Dec 21, 2021, 11:09 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் நேற்று டிசம்பர் 20 ஆம் தேதி, மின் பகிர்மான துணை மின்நிலையம் அலுவலர்கள் 4 பேர் ஒப்பந்த கார் ஒன்றில் கோபி சீதா கல்யாண மண்டபம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். காரை பச்சமலை என்ற ஓட்டுநர் ஓட்டியநிலையில், வடுக பாளையம் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. .

கார் ஓட்டும்போது மாரடைப்பு

அங்கு வந்த ஆம்புலன்ஸில் விபத்துக்குள்ளான மின்வாரிய அலுவலர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த ரவிசந்திரன், மகள் பானுமதி ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் காரை ஓட்டி வந்த பச்சமலை பகுதியைச் சேர்ந்த அதியமானுக்குக் காரை ஓட்டி வரும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து தெரியவந்தது.

மின்வாரிய ஒப்பந்த கார் ஓடும்போது ஓட்டுநருக்கு மாரடைப்பால் உயிரிழந்த விபத்தில் உயிரிழந்தார்

மேலும், இரு சக்கர வாகனத்தில் வந்த வடுக பாளையம் புதூரை சேர்ந்த தந்தை ரவிச்சந்திரன், மகள் பானுமதி படுகாயங்களுடன் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரையும் மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காரில் பயணம் செய்த மின்வாரிய அலுவலர்கள் 4 பேர் படுகாயங்களுடன் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த கார் ஓட்டுநர் அதியமானின் உடல் பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: யூடியூப் பார்த்து கொள்ளையடித்த கொள்ளையன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.