ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி, ஆசனூர் காவல் நிலையங்களில் ஆய்வுசெய்த கோவை சரக டிஐஜி எஸ்.எம். முத்துச்சாமி, மாநில எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
உஷார் நிலையில் எல்லைப்பகுதி
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் தாளவாடி, ஆசனூர் காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக் காவல் நிலையங்களுக்குள்பட்ட வனப்பகுதியில் புதிய நபர் வருகை குறித்து காவல் துறையினர் கண்காணித்துவருகின்றனர்.
கேரளா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தையொட்டி தமிழ்நாடு எல்லையில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு டிஐஜி எஸ்.எம். முத்துச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் தகவல்களைத் திரட்டி, வெளியூர் நபர்கள் குறித்து பதிவுசெய்ய வேண்டும் எனவும் கிராமங்களில் புதிய நபர் வந்தால் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்குபடி கிராமங்களிடம் அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கிராமங்களில் முக்கியச் சந்திப்பு சாலையில் சிசிடிவி கேமரா பொருத்தி புதிய நபர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சென்னையில் நீடிக்கும் வடிகால் பிரச்சினை: நிரந்தர தீர்வு குறித்து ஸ்டாலின் ஆலோசனை