ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோயில் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. விழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவர் என்பதால் குண்டம் திருவிழாவிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக தீப்பிடிக்காத தகர சீட்டுகளால் ஆன பந்தல் அமைக்கும் பணி தற்போது கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் முட்புதர்களை அகற்றி சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும், கோயில் வளாகத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்க ஏதுவாக பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாகக் கோயில் அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோயில் வளாகத்தில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனாவை எதிர்க்க கோமியம் - ஹிந்து மகாசபாவின் புதிய திட்டம்!