ETV Bharat / city

2021 ரஜினி தலைமையில் ஆட்சி மாற்றம் - அர்ஜுன் சம்பத் - அர்ஜுன் சம்பத் பேட்டி

2021 சட்டப்பேரவை தேர்தலில் ஆன்மிக அரசியலை முன் வைத்து நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

arjun sampath addressing press
arjun sampath addressing press
author img

By

Published : Oct 2, 2020, 6:24 AM IST

ஈரோடு: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவதற்காக ஈரோடு வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைரேஷன் என்ற திட்டம் மக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான திட்டம். இந்தத் திட்டம் குறித்த எதிர்க்கட்சிகளின் அவதூறு பரப்புரை கண்டிப்பாக முறியடிக்கப்படும்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆன்மிக அரசியலை முன்வைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதிமுகவில் எந்த ஒரு உள்கட்சி பூசலும் இல்லை. எதிர்க்கட்சிகள்தான் இதுபோன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றனர். அதிமுகவின் இரு தலைமை மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது” என்றார்.

அர்ஜுன் சம்பத் பேட்டி

மேலும், திமுகவில்தான் உள்கட்சிப் பூசல் இருந்துவருகிறது என்றவர், திமுக தலைவர் ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக மறைந்த இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலனுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அவரது புகைப்படத்திற்கு இந்து மக்கள் கட்சியினர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.