ETV Bharat / city

கைக்குழந்தைகளுடன் வடமாநில பெண் தூக்கிட்டுத் தற்கொலை - போலீஸ் விசாரணை - Woman committed suicide

கோயம்புத்தூரில் வேலை செய்து வரும் நேபாளத்தைச் சேர்ந்தவரின் மனைவி, கைக் குழந்தைகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கை குழந்தைகளுடன் வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை

author img

By

Published : Aug 26, 2021, 6:17 PM IST

கோயம்புததூர்: குப்பனூரில் நேபாளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (24) என்பவர் தனது மனைவி தன்கலா (22) என்பவருடன் வசித்து வருகிறார்.

இவர்களுக்கு அலிசா (3), ருத்ரா (1) என இரு குழந்தைகள் இருந்தனர். இவர்கள், அங்கிருக்கும் மாட்டுப்பண்ணையில் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஆக.26) காலை வழக்கம்போல் ராஜ்குமார் பணிக்குச் சென்றுவிட்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இவரது மனைவி தன்கலா, இரு குழந்தைகளுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

கணவரிடம் காவல் துறை விசாரணை

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் காவல் துறையினர், உயிரிழந்து கிடந்த பெண், குழந்தைகளின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராஜ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. அதேபோல், இன்று காலையும் ஏற்பட்ட தகராறு காரணமாக தன்கலா இம்முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

குழந்தைகளுடன் தாய் தற்கொலை

இருப்பினும், தன்கலா உடலில் ரத்த காயங்கள் இருப்பதால், இது குறித்து அவரது கணவர் ராஜ்குமாரிடம், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தற்கொலை நாடகத்தை காட்டிக் கொடுத்த இளைஞரின் செயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.