கோயம்புத்தூர்: உக்கடம் புல்லுகாடு பகுதியில் உள்ள அரசு குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கோவை ஸ்மார்ட்சிட்டி பணிகள் மேற்கொள்ளப்படும் போது பல்வேறு இடங்களிலிருந்த மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் மக்கள் குடியிருந்து வரும் நிலையில் தற்பொழுது நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பூத் சிலீப் வராததால் தங்களுக்கு எங்கு ஓட்டு உள்ளது என்று தெரியாமல் இருக்கின்றனர்.
இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டபோது பதில் அளிக்காமல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே போன்று பல்வேறு குழப்பங்கள் இருந்ததால் வாக்களிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் அதிமுக வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு