மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களாகப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தது.
பின்னர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான், குற்றால அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதலே சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வந்த நிலையில், அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பணியில் இருந்த வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர்.
மேற்கொண்டு சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் மழை நீடித்ததால் நாளையும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என போளுவாம்பட்டி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
தள்ளி நின்று தேடும் தொலைதூரக் காதலின் உணர்வுக் குவியல் இந்த பொன்வசந்தம்...