சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் கந்தசாமி அப்பகுதியில் உள்ள அதிமுகவினரையும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். சோமனூர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தைப் பள்ளி மாணவர்கள் எளிதில் கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
விசைத்தறி தொழில் அதிகமாக உள்ள சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் விசைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உரங்களும், விவசாய இடுபொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவிநாசி - அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் சூலூர் தொகுதியில் விடுபட்ட பகுதிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.