ETV Bharat / city

அரசின் அலட்சியம்: அசுத்தமாக காட்சியளிக்கும் ஆழியார் பூங்கா - கோயம்புத்தூர் ஆழியார் பூங்கா

கோவை: பொள்ளாச்சியில் உள்ள ஆழியார் பூங்கா மாசு அடைந்து காணப்படுவதால், பூங்காவை சீரமைக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசின் அலட்சியம்: அசுத்தமாக காட்சியளிக்கும் ஆழியார் பூங்கா!
author img

By

Published : Jul 15, 2019, 1:51 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் உள்ளது ஆழியார் பூங்கா. இந்த பூங்கா கடந்த 1962ஆம் ஆண்டு காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இதை தற்போது பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

விடுமுறையை கழிக்க வால்பாறை வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த பூங்காவிற்கும் வந்த வண்ணம் உள்ளனர். பூங்காவில் குழந்தைகள் விளையாடக்கூடிய மிதிபடகு, சிறிய வகை ரயில் உள்ளிட்டவை இருந்தும் அவைகள் குப்பையாக காட்சியளிக்கின்றன.

அரசின் அலட்சியம்: அசுத்தமாக காட்சியளிக்கும் ஆழியார் பூங்கா!

மேலும் பூங்காவில் கழிப்பிட வசதி இருந்தும் பராமரிப்பு இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் அவநிலை உருவாகியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. பூங்காவை முறையாக பாராமரித்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என, தமிழ்நாடு அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:aliyar Park 2Body:aliyar Park 2Conclusion:பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் பூங்கா மாசு அடைந்து உள்ளதால் விரைவில் சீர்மைக்க பொதுமக்கள் கோரிக்கை.பொள்ளாச்சி-14 பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் உள்ளது ஆழியார் பூங்காவாகும், 1962 ஆம் ஆண்டு அன்றையா முதல்வர் காமராஜ்ர்ரால் திறந்து வைக்கப்பட்டது. இப்பூங்கா பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தமிழகம், கேரளா, என வெளி மாநிலங்களில் இருந்து விடுமுறை நாட்களில் குவிந்து வண்ணம் உள்ளனர். பூங்காவில் குழந்தைகள் விளையாட தூரி, கால்மிதிபடகு, சிறிய வகை ரயில், என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தும் பொதுபணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் குப்பைககள், பிளாஸ்டிக் கழிகள் நிறைந்த பூங்காவாக உள்ளது. கடந்த 20 வருடங்கள் முன்பு பூங்காவில் புள்ளிமான்,கடா மான், வெள்ளை எலி, கிளிகள் , குரங்குகள், குருவிகள் , என வனத்துறையினர், பொதுபணித்துறையினர் மூலம் பராமரித்து சுற்றுலா பயணிகள் கண்டு களித்து சென்றனர், ஆனால் சமூக விரோத செயல் நடைபெற்றதால் வனத்துறையினர் விலங்குகள் மற்றும் பறவைகளை அடர்வன பகுதிக்கு எடுத்து சென்று விட்டனர், பூங்காவில் கழிப்பிட வசதி இருந்தும் பராமரிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் அவநிலையாகும், ஆழியார் அணையிலிருந்து விவசாயித்துக்கு வேட்டைகாரன்புதூர் கிளை வாய்க்காலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வீசும் கழிவுகள் இங்குள்ள ஊழியர்கள் தீ வைத்து அழிப்பதனால் சுற்றுசுழல் மாசுபடுகிறது, ஆழியார் பூங்காவை விரைவில் சீர் செய்தும், கூடுதல் பாதுகாவலர்கள் நியமிக்கவும், சமூக விரோத செயல்களை தடுக்க பூங்கா வெளியோ காவல் சோதனை சாவடியில் காவலர்கள் அமைத்தும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாகும்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.