கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று சென்றிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உட்பட திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ரயில்வே துறையிடமும் மத்திய அரசிடமும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அனைத்து ரயில்கள் நின்று சென்றிட நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அடுத்தக்கட்ட ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இது தந்தைப் பெரியாரின் திராவிட பூமி..! - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ