Latest Coimbatore News: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம், கக்கடவு, ரங்கம்புதூர், மூட்டாம் பாளையம் ஆகிய கிராமங்களின் சார்பில் இரண்டாமாண்டு ரேக்ளா போட்டி ரங்கம்புதூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும்; அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் 400க்கும் மேற்பட்ட ஜோடி நாட்டு இன காளைகளும் பங்கேற்றன.
இதையடுத்து, அழிந்து வரும் காங்கேயம் நாட்டு இன காளைகளைப் பாதுகாக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த ரேக்ளா பந்தயத்தில் மாட்டு வண்டியில் பூட்டிய காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்து சென்றன. இந்நிகழ்வின்போது இருபுறமும் இருந்த பொது மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
இப்போட்டியானது 200 மீட்டர், 300 மீட்டர் என்ற அளவில் நடைபெற்றது. மேலும், இப்போட்டியில் குறைந்த நேரத்தில் நிர்ணயித்த இடத்தை தொட்ட காளைகளின் உரிமையாளர்களுக்குத் தங்க நாணயமும், ரொக்கப்பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
இதையும் படிங்க: பழங்குடியின இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட கபடிப் போட்டி