ETV Bharat / city

பணம் தர மறுத்த அடகுகடை உரிமையாளர் மீது தாக்குதல்! - Ramanathapuram area of ​​Coimbatore

கோவை: வெள்ளி கொலுசுக்கு பணம் தர மறுத்த அடகுகடை உரிமையாளரை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அடகுகடை உரிமையாளர் பணம் தர மறுத்ததால் கத்தியால் குத்திய தீபக் மற்றும் சபரீசன்

author img

By

Published : Jul 29, 2020, 3:15 PM IST

கோவை இராமநாதபுரம் பகுதியில் அடகுகடை வைத்திருப்பவர் ராஜமாணிக்கம் (31). இவர், தங்க நகைகளுக்கு மட்டும் அடகு பணம் அளித்து வருகிறார்.

இவரின் அடகு கடைக்கு நேற்று (ஜூலை28) மாலை அதே பகுதியை சேர்ந்த தீபக் மற்றும் சபரீசன் ஆகிய இருவரும் வந்தனர்.

அவர்கள், இராஜமாணிக்கத்திடம் சென்று வெள்ளி கொலுசை வைத்து பணம் கேட்டுள்ளனர். ஆனால் தங்க நகைக்கு மட்டும் தான் பணம் தரப்படும் என்று கூறியதால் ராஜமாணிக்கத்திடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜமாணிக்கத்தை தாக்கியுள்ளனர். இதில் ராஜமாணிக்கத்தின் தலையில் ரத்தம் வழிய தொடங்கியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராஜமாணிக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார்.

இது குறித்து ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் குடிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த நகையை எடுத்து வந்து அடமானத்திற்கு வைத்ததும் ஏற்கனவே தீபக் மீது இரு கொலை முயற்சி வழக்கு இருப்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் இருவரும் இந்து முன்னணி அமைப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காக்க... காக்க... சுற்றுச்சூழல் காக்க - நடிகர் சூர்யா ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.