கோயம்புத்தூர்: நேற்று(அக்.16) காலை கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், மாலையில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் நேற்றிரவும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாகப் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. பல்வேறு நீர் நிலைகளில் நீரின் அளவும் உயர்ந்துள்ளது.
மீண்டும் மூடப்பட்ட கோவை குற்றாலம்
இதனால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, இன்று (அக்.17) கோவை குற்றால அருவி திரும்பவும் மூடப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், கரோனா தொற்று குறைந்து கோவை குற்றால அருவி திறக்கப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் தற்போது மூடப்பட்ட நிகழ்வு, சுற்றுலாப் பயணிகளைக் கவலையுற செய்துள்ளது.
இந்நிலையில் நீர் நிலை அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது' - சி.வி.சண்முகம் ஆவேசம்!