ETV Bharat / city

கோவையில் திருமணத்துக்கு மறுத்த காதலியை கொலை செய்த காதலன் - திருமணத்திற்கு ஒத்துழைக்கவில்லை காதலியை கொலை செய்து காதலன் வெறிச்செயல்

கோயம்புத்தூர்: திருமணத்திற்கு மறுத்து வந்த காதலியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் ஜோடி
காதல் ஜோடி
author img

By

Published : Mar 1, 2020, 12:55 PM IST

கோவை கீரணத்தம் கல்லுக்குழிப் பகுதியைச் சேர்ந்தவர் முருகனின் மகள் நந்தினி (21). இவர், கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நந்தினிக்கு சங்கனூரைச் சேர்ந்த தினேஷ் உடன் காதல் இருந்ததாகத் தெரிகிறது.

இருவரும் சிறுவயது முதலே ஒன்றாக படித்து வந்துள்ளனர். இருவரும் பல நாட்களாக காதலித்து வந்த நிலையில், தினேஷ் நந்தினியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். தனது பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல், நான் திருமணம் குறித்து முடிவு செய்ய முடியாது என்று நந்தினி கூறிவந்துள்ளார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணத்தைப் பற்றி வீட்டில் கூறலாம் என்றும், தினேஷிடம் பலமுறை கூறிவந்துள்ளார். எனினும் அதை பொருட்படுத்தாத தினேஷ் நந்தினி செல்லும் இடங்களுக்குச் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதன் காரணமாக, நந்தினி தினேஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதி மதியம் நந்தினியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த நந்தியினிடம், திருமணத்தைப் பற்றியே பேசியதால் கோபமடைந்த நந்தினி அதற்கு மறுத்து பேசியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தினேஷ், அங்கிருந்த நாற்காலியைக் கொண்டு தாக்கியதில் நந்தினிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின்பு தினேஷ் அங்கிருந்த ஒரு துணியினால் நந்தினியின் கழுத்தையும் இறுக்கி, அவரது வாயில் சாணி பவுடரையும் ஊத்திவிட்டு தப்பியோடினார். வீட்டில் மயங்கிய நந்தினியை, அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார்.

இதையறிந்த நந்தினியின் உறவினர்கள், தினேஷை கைது செய்யும் வரை நந்தினியின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, மருத்துவமனை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, கோவில்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தினேஷை தேடிவந்த நிலையில், சாணி பவுடரைக் குடித்து விட்டு அவரும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதையும் படிங்க: காதல் திருமணத்தால் ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட நபர்: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.