கோவை மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் மேற்கு புறவழிச்சாலை, கோவை - கரூர் புறவழிச்சாலை, கோவை வட்டச்சாலை ஆகிய திட்டங்களின்கீழ் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வன விலங்குகளால் ஏற்படும் பயிர், உயிர் சேதங்களைத் தடுக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;கோடையின் தாக்கத்தைச் சமாளிக்கும் உயிரியல் பூங்கா!