ETV Bharat / city

சிக்கிய போலி சித்த மருத்துவர்: சிகிச்சை அளித்த வீட்டுக்கு சீல்! - fake siddha doctor arrested in coimbatore pollachi

கோயம்புத்தூர்: மகாலிங்கபுரத்தில் சித்த மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

doctor arrest  fake siddha doctor arrested in coimbatore pollachi  கோவை போலி சித்த மருத்துவர்
கோவை போலி சித்த மருத்துவர்
author img

By

Published : Dec 20, 2019, 4:20 PM IST

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்துக்குமார் (60). இவர் முறையான கல்விச் சான்றிதழ்கள் இல்லாமல் சித்த வைத்தியச் சிகிச்சை அளித்துவந்துள்ளார். சிறுநீரகக் கல், மஞ்சள் காமாலை, குழந்தையின்மை போன்ற நோய்களுக்கு சிகிச்சையளித்து வந்த இவர், மருந்துகளுக்கு மட்டும் கட்டணம் பெற்றுள்ளார்.

கோவை மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் அதிகரித்துவருவதாக எழுந்த புகாரையடுத்து, மாவட்ட சித்த மருத்துவ இயக்குநர் தனம் சோதனையில் ஈடுபட்டார். அப்போது பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, இயக்குநர் தனம் ஆகியோர் அலுவலர்களுடன் சென்று மாரிமுத்துக்குமாரை விசாரித்தபோது முறையான கல்விச்சான்று இல்லாமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: காப்பான் படம் வெளிக்கொணர்ந்த கதை: பூச்சித் தாக்குதல்... உருவானதா? உருவாக்கப்பட்டதா?

இதனையடுத்து அவரது வீட்டிற்கு வருவாய்த் துறை அலுவலர்கள்கள் சீல் வைத்தனர். விசாரணைக்கு பின்பு மாரிமுத்துக்குமாரை காவல் துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

Intro:arrestBody:arrestConclusion:பொள்ளாச்சியில் போலி சித்த மருத்துவர் கைது சிகிச்சை அளித்த வீட்டுக்கு சீல்.

பொள்ளாச்சி – 19

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியை சேர்ந்த போலி டாக்டர் மாரிமுத்துக்குமார், 60. இவர் முறையான கல்வி சான்று இல்லாமல் சித்த வைத்திய சிகிச்சை அளித்துள்ளார். சிறுநீரக கல், மஞ்சள் காமாலை, குழந்தையின்மை போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ள நிலையில் மருந்துகளுக்கு மட்டும் கட்டணம் பெற்றுள்ளார். கோயம்புத்துார் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகரித்து வருவதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட சித்த மருத்துவ இயக்குனர் தனம் சோதனையில் ஈடுபட்டார். பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் இயக்குனர் தனம் மற்றும் அதிகாரிகள், மாரிமுத்துக்குமாரை விசாரித்தபோது முறையான கல்வி சான்று இல்லாமல் சிகிச்சை அளித்தது தெரிந்தது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். போலி டாக்டர் மாரிமுத்து குமார் விசாரணைக்கு பின்பு போலீசார்கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.