கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை உலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் தேவாலயங்களில் கொண்டாடுவர்.
தற்போது கரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரில் உள்ள அனைத்து கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று கோவை காந்திபுரம் சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில், ஆயர் தலைவர் பர்னபாஸ், உதவி ஆயர் நெல்சன் தலைமையில் மக்கள் இல்லாமல் செல்போனில் ஃபேஸ்புக் மூலம் நேரலை ஆராதனை நடைபெற்றது.
இதில் திருச்சபை மக்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடி ஆராதனையில் கலந்துகொண்டனர். திருச்சபை தொடங்கிய நாள் முதல் இதுபோன்று ஆராதனை நடைபெற்றது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை