கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. அதிமுகவைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் பேரூராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (ஏப்.23) வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் அப்படத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தினர். அப்போது, திமுக கவுன்சிலர் கனகராஜ் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமரின் புகைப்படத்தை அகற்றினார்.
அனுமதி பெற்றுவந்தபின், பிரதமர் மோடியின் படத்தை வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பாஜகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், பேரூராட்சி தலைவர் இருக்கும் போதே திமுக கவுன்சிலர் இவ்வாறு நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு!