கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நா. மகாலிங்கம் கல்லூரி சார்பில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.
யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் நீலத்தடி நீரைப் பாதுகாப்பது குறித்தும், நீரின் அவசியம் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக பதாகைகள் ஏந்தி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முதல் சார் ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் 2019 - நான்கு மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் வெளியீடு!