ETV Bharat / city

தேர்தலுக்கான வேட்பாளர்கள் இரண்டு நாள்களில் அறிவிப்பு- முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் - பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து மாநில தலைவர் அண்ணாமலை தான் முடிவு செய்வார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

pon radhakrishnan
pon radhakrishnan
author img

By

Published : Jan 29, 2022, 1:40 AM IST

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் நேற்று(ஜன.28) நகர்ப்புற தேர்தல் குறித்து மாவட்ட மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்பு முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "காணொளி மூலமாக மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடைபெற்றது. ஓரிரு நாட்களில் நேர்காணல் முடிந்த பிறகு வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, இது பற்றி எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை தான் முடிவு செய்வார்.

மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்ததா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை எங்கள் மாநில தலைவருக்கு வழங்கியிருக்கிறோம். இப்போது எங்கள் முழு கவனமும் வேட்பாளர் நேர்காணல் குறித்து தான் முடிவு எடுத்து வருகிறோம்.

மேலும் வேட்பாளர் நேர்காணல் பணி நாளை அல்லது நாளை மறுதினம் முடிவடையும். அதில் எந்த விதமான குழப்பங்களும் இல்லாமல் பார்த்துக்கொள்வதாக மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை வழங்கி உள்ளதாகவும்" அவர் தெரிவித்தார்.

பாஜக தனித்து போட்டியிடுமா இந்த கேள்விக்கு மாநில தலைவர் தான் இதில் முடிவு எடுப்பார் என்றும் அதற்கு முழு அதிகாரம் அவருக்கு உள்ளதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இளைஞர் அணி செயலாளர் வினோத் பி. செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு இது வெட்கக்கேடான செயல் என்றும் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும், ஒரு ட்விட் செய்ததை கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு திமுக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு இது அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாக உள்ளதாகவும். ஆனால் இன்று உண்மை நிலவரத்தை மூடி மறைப்பதற்காக எதிரான வேலைகள் இங்கு நடைபெறுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: ரயில்வே தேர்வு குளறுபடி - விண்ணப்பதாரர் கருத்து கேட்பு முகாம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.