ETV Bharat / city

'மருத்துவப் படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணாக்கருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்'

author img

By

Published : Nov 23, 2020, 3:40 PM IST

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை 10 விழுக்காடாக உயர்த்தி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அந்தப் பலன் சென்றடைய ஆவன செய்யுமாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

வீரமணி
வீரமணி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "‘நீட்’ தேர்வில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அரசு பள்ளிகளில் பயின்று வெற்றி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கு அந்த இட ஒதுக்கீடு கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத கொடுமை ஏற்பட்டது. காரணம், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துதான் மருத்துவப் படிப்பை முடிக்க முடியும். அங்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணங்களைவிட பன்மடங்கு அதிகம். தாங்கள் வசதியற்ற, ஏழை, கிராமங்களில் வசிக்கக்கூடிய மற்றும் வாழ்வாதாரத்தில் மிகவும் கீழே உள்ளவர்கள் என்பதால், தாங்கள் விலகுவதாக, மனம் உடைந்து எழுதிக் கொடுத்தனர்.

இப்போது - காலந்தாழ்த்தியாவது, தமிழ்நாடு அரசே அவர்களது கல்விக் கட்டணத்தை ஏற்கும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது நன்றிக்குரியது என்பதால், அவர்கள் எழுதிக் கொடுத்ததை மாற்றி, அவர்களையும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி, அவர்கள் நெஞ்சில் பால் வார்க்க வேண்டியது மனிதாபிமான அடிப்படையில் மிகவும் முக்கியமாகும்.

அதோடு, அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, நீதிபதி பரிந்துரைப்படி 10 சதவிகித உள் ஒதுக்கீட்டை செயல்படுத்திடுவது அவசிய, அவசரமாகும்.

அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளும் பயன்பெறுவது முக்கியம்.

அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என்பது, நிர்வாகத்தைப் பொறுத்த மாற்றமே தவிர, பாடத் திட்டத்திலோ, தேர்விலோ எந்த மாறுதலும் உள்ளவை அல்ல. சமூகநீதி அந்த மாணவர்கள், பெற்றோருக்கும் கிடைக்கச் செய்வதுதான் சுய முரண்பாடற்ற சமூகநீதி செயலாக்கம். இது முக்கியம்!

தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்க!

உவமைக் கவிஞர் சுரதா 100ஆம் ஆண்டு விழா: திராவிடர் கழகம் சார்பில் விழா !

உவமைக்கவிஞர் சுரதா திராவிடர் இயக்கம் தந்த ஒப்பற்ற கவிஞர் - கொள்கை அடிப்படையில் நாத்திகர் என்பதை பிரகடனப்படுத்தத் தயங்காதவர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மாணவர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயரான கனக சுப்புரத்தினத்தின் (‘‘சுப்புரத்தின தாசன்’’ என்பதன்) சுருக்கம்தான் சுரதா. அவரது நூற்றாண்டு தொடக்கத்தில் அவரை வாழ்த்துவோம்! திராவிடர் கழகம் சார்பில் கவிஞர் சுரதா நூற்றாண்டு - இந்த ஆண்டுக்குள் சிறப்பாக நடத்தப் பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.