கரோனா தடுப்பூசி மைய செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று (ஜனவரி 7) சென்னை வந்தடைந்தார். அவரை, மாநில சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார்.
இதையடுத்து, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லத்துக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் புறப்பட்டார்.