ETV Bharat / city

பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் திராவிட மாடலின் அங்கம்தானோ? - டிடிவி தினகரன் கண்டனம் - minister ponmudi

அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்சில் பயணம் செய்பவர்கள்’ என்று பேசிய அமைச்சர் பொன்முடிக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் திராவிட மாடலின் அங்கம்தானோ? - டிடிவி தினகரன் கண்டனம்

author img

By

Published : Sep 26, 2022, 12:50 PM IST

சென்னை: சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ’பெண்கள் ஓசி பேருந்தில்தான் பயணம் செல்கிறீர்கள்’ என அமைச்சர் பொன்முடி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

”அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பேருந்தில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது.

  • அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது. (1/3) @mkstalin @CMOTamilnadu

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?!” என தினகரன் வினவியுள்ளார்.

இதையும் படிங்க: பொன்முடியின் விவாதத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.