சென்னை: போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து பேருந்து சேவைகளும் வழக்கமான அட்டவணையின்படி இயக்குவதை உறுதி செய்ய வேண்டும். பணிமனைகளில் பேருந்து பாதுகாப்பினை உறுதி செய்ய போதிய அளவு மின் வெளிச்சம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். தேவை ஏற்படின் கூடுதல் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
பணியாளர்களுக்கு பாதுகாப்பாற்ற இடங்களில் பேருந்தை நிறுத்தக்கூடாது. பணிமனைக்கு காவல்துறை பாதுகாப்பு பெறுவதை உறுதி செய்ய வேண்டும். பேருந்து சேவை குறித்த விவரங்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அரசிற்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டுப்பாட்டு அறைக்கு பேருந்து குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பேருந்து சேவையை இயக்கும் போது பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச செஸ் வீரர்களை ஈர்க்கும் செல்ஃபி ஸ்பாட் மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ!