ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @7Am

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

author img

By

Published : Jul 20, 2021, 7:10 AM IST

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்

1. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2. 'மீனவர்களுக்கு எதிராகசட்டமா? விடமாட்டோம்' - கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

மீனவர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

3. 'முதலமைச்சர் ஊதிய வாக்குறுதியை நிறைவேற்றணும்' - அரசு மருத்துவர்கள்

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஊதிய உயர்வுகோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த மருத்துவர்களிடம் அளித்த வாக்குறுதியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

4. விரைவுச் சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்குத் தடை கோரிய மனுவிற்கு மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. ஆட்சியர் அலுவலகத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் முற்றுகை

தூத்துக்குடியில் ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அரசு அனுமதிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர்.

6. எரிகாற்று குழாய்களை அகற்றுக... 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

தர்மபுரியில் இறக்கி வைக்கப்பட்ட எரிகாற்று குழாய்களை தமிழ்நாட்டை விட்டு அப்புறப்படுத்தக் கோரி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7. பெகாசஸ் விவகாரத்தில் அரசை குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை - ரவிசங்கர் பிரசாத்

பெகாசஸ் உளவு செயலி மூலம் பல அரசியல் பிரமுகர்களின் அலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர அமித் ஷா ஆகியோர் மீது குற்றஞ்சுமத்த எந்த முகாந்திரமும் இல்லை என பாஜக மூத்தத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

8. ஆபாச படம் பதிவேற்றம்: ராஜ் குந்த்ரா கைது

மும்பை: ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

9. டிஎன்பிஎல் 2021: மழையால் கைவிடப்பட்ட முதல் போட்டி; சுதர்சனின் அதிரடி வீண்

டிஎன்பிஎல் தொடரின் கோவை, சேலம் அணிகளுக்கு இடையேயான முதல் லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

10. ’திரையில் அப்படி ஜொலிக்கிறார்...’ - விஜய் தேவரகொண்டாவை புகழ்ந்து தள்ளிய ’கல்ட்’ இயக்குநர்!

விஜய் தேவரகொண்டா பாலிவுட்டில் அறிமுகமாகும் ’லிகர்’ படத்தின் சில காட்சிகளை கண்டுகளித்த பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, விஜய் தேவரகொண்டாவை அலாதியாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.