ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news@7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 18, 2021, 7:26 AM IST

1. 5 நாள்களில் மட்டும் 1.42 கோடி பெண்கள் இலவசப் பயணம் - ராஜகண்ணப்பன்

முதலமைச்சர் அறிவித்த, மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தின் வாயிலாக, கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 1.42 கோடி பெண்கள் இலவசமாகப் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

2. கரோனா தடுப்பூசி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் - அமைச்சர் மா.சு.

வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கரோனா தடுப்பூசி குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3. பொன் வேண்டாம் பொண்ணே போதும் - 'மாஸான' மாப்பிள்ளை

வரதட்சணை கொடுமை காரணமாக ஏற்படும் மரணங்கள் கேரளாவில் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கட்டிய தாலியுடன் மணமகளை அழைத்துச் சென்ற மணமகனின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

4. 'கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் திராவிட கட்சிகள்'

திராவிட கட்சிகள் கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து புறக்கணித்துவருவதாக கொங்கு வேளாள கவுண்டர் பேரவை குற்றஞ்சாட்டியுள்ளது.

5. வாகனக் கட்டணத்தை அதிகரிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

திரையரங்குகளில் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

6. ’செப்டம்பர் 30க்குள் முதலாம் ஆண்டு படிப்புகளுக்கான சேர்க்கை’ - யுஜிசி உத்தரவு

2021-22 கல்வி ஆண்டு முதலாம் ஆண்டு படிப்புகளுக்கான சேர்க்கையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், வகுப்புகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

7. 'பாலியல் தொல்லை குறித்து அச்சமின்றி மாணவிகள் தெரிவிக்க குழு அமைத்திடுக'

பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் உளவியல் பெண் நிபுணர் அடங்கிய குழுவும், புகார் பெட்டியும் அமைத்திட தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8. HBD SMRITHI MADHANA: பெண்கள் கிரிக்கெட்டில் ஒளிரும் நட்சத்திரம்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது 25ஆவது பிறந்தநாளை இன்று (ஜூலை 28) கொண்டாடுகிறார்.

9. ஓடிடிக்கு செல்கிறதா நரகாசூரன்?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘நரகாசூரன்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

10. ஆகஸ்டில் வெளியாகிறதா 'வலிமை' டீசர்!

வலிமை திரைப்படத்தின் டீசர் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.