ETV Bharat / city

கோடையைக் குளிர்விக்க வரப்போகிறது மழை!

author img

By

Published : Apr 6, 2022, 3:19 PM IST

மன்னர் வளைகுடா, தமிழ்நாட்டின் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்.7) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

சென்னை: தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்.7) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.8, 9 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழ்நாடு, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.10ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் ஓர் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வானிலை ஆய்வு மைய ஊழியர்கள் போராட்டம்... எதற்கு இந்தப் போராட்டம்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.