ETV Bharat / city

தமிழ்நாட்டில் 275 பேருக்கு கரோனா சிகிச்சை

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 275 என குறைந்து, இன்று (ஏப்.3) கரோனா வைரஸ் தொற்றினால் 23 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Apr 3, 2022, 10:09 PM IST

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏப்.3ஆம் தேதி கரோனா நோய் பாதிப்புகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அந்தத் தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்து 788 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால், தமிழ்நாட்டில் இருந்த மேலும் 23 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 804 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் இருந்த 34 லட்சத்து 52 ஆயிரத்து 910 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

275 பேர் மட்டுமே சிகிச்சை: இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 275 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்த 32 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 610 என உயர்ந்துள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது: மேலும், சென்னையில் புதிதாக 9 நபர்களுக்கும் செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும் கோயம்புத்தூர், நாமக்கல், நீலகிரி, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் என புதிதாக 23 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பரிசோதனை செய்பவர்கள் எண்ணிக்கையில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 0.1 என குறைந்துள்ளது.

இதையும் படிங்க: ரம்ஜான் நோன்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.