ETV Bharat / city

’பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 2,327 கோடி ஒதுக்கீடு’ - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Aug 20, 2021, 9:13 AM IST

சென்னை: 2021-2022ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் 2,327 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பயிர் காப்பீட்டுத் திட்டம்
பயிர் காப்பீட்டுத் திட்டம்

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்து, சுமார் 60 விழுக்காடு வேளாண்மையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதில், சிறப்பு நடவடிக்கையாக இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாக்க 'பயிர் காப்பீட்டுத் திட்டம்' சுமார் 2,327 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 2021-2022ஆம் ஆண்டில் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையில் ஒன்றிய அரசு தனது பங்கை குறைத்துவிட்டதால், மாநில அரசின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது.

இரு முறை ரத்து

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தில் அதிக இழப்பீட்டுத் தொகை வழங்கியதாலும், இந்தாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை.

எனினும், தமிழ்நாடு அரசு எடுத்த பெரும் முயற்சியினால் ஐந்து காப்பீட்டு நிறுவனங்கள் முன்வந்த நிலையில், காப்பீட்டு கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்கு அதிகமாக இருந்த காரணத்தாலும், காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளியில் அதிக காப்பீட்டு கட்டண விகிதம் நிர்ணயம் செய்திருந்ததாலும், இரு முறை ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டது.

அவகாசம் உள்ள பயிர்கள்

மூன்றாவது ஒப்பந்தப் புள்ளியில் இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் (பொது காப்பீட்டு நிறுவனம்), இப்கோ-டோக்கியோ ஆகிய இரு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன.

மேற்குறிப்பிட்ட காரணங்களினால், காரி (ஏப்ரல் முதல் ஜுலை) பருவப் பயிர்களான நெல், தட்டைப் பயறு நீங்கலாக ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்ய கால அவகாசம் உள்ள பயிர்களான மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைகிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி ஆகிய பயிர்கள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் (Notified Areas) காப்பீடு செய்யப்படும்.

நெற்பயிருக்கும் இழப்பீடு

எனினும், காரிப் பருவத்தில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய இயலாத பயிர்கள் (முக்கியமாக நெற்பயிர்) இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட நேரிட்டால் மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், சிறப்பு பருவமான ராபி பருவத்தில் (அக்டோபர் முதல் மார்ச்) அறிவிக்கை செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காப்பீடு செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை பொறுத்தவரை, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை காரி 2020 பருவத்திற்கு 107.54 கோடி ரூபாய் சுமார் 1,64,173 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு கட்டண மானியம்

கடந்த 2020-2021ஆம் ஆண்டு சம்பா நெற்பயிர் நிவர் புயல், புரவிப் புயல், வடகிழக்கு பருவ மழை ஆகிய இடர்பாடுகளால் பெரும் சேதமடைந்தது. அதற்கான இழப்பீட்டுத் தொகை மாநில பேரிடர் நிதியிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, சம்பா நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு 'காப்பீட்டுக் கட்டண மானியமாக' 1,248.92 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

இத்தொகை, திட்டம் தொடங்கப்பட்ட 2016-2017ஆம் ஆண்டு முதல் 2020-2021ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட மானியத்தை விட அதிகமான தொகையாகும்.

தற்போது தமிழ்நாடு அரசு பெரும் நிதிச்சுமையில் இருந்தாலும், விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் சம்பா நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகைப் பெற இத்தொகையை அரசு விடுவித்துள்ளது.

அரசின் வேண்டுகோள்

ஆகையால், கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் / தேசியமயாக்கப்பட்ட வங்கிகளிலும், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் (e-சேவை மையங்கள்) காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்: விவசாயிகளின் வரவேற்பும் விமர்சனமும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.