ETV Bharat / city

பிப்., 20ஆம் தேதி வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் - தமிழ்நாடு செய்திகள்

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 20ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

சபாநாயகர் தனபால்
சபாநாயகர் தனபால்
author img

By

Published : Feb 14, 2020, 11:25 PM IST

2020-2021ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் இன்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள பத்தாவது பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், ”வருகிற 17ம் தேதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். பின்னர் 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் நடத்தப்படும். 18ஆம் தேதி இரண்டாம் நாள் பொது விவாதம் தொடரும். 19ஆம் தேதி மூன்றாம் நாள் பொது விவாதமும், 20ஆம் தேதி காலை 10 மணியளவில் வழக்கம்போல் சட்டப்பேரவைக் கூடி எதிர்க்கட்சியினரின் பதிலுரை தொடரும்” என்றும் தெரிவித்தார்.

சபாநாயகர் தனபால் பேட்டி

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த திமுகவின் கோரிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் பற்றி அவையில்தான் தெரிவிக்கப்படும் என்றார். மேலும் 11 எம்.எல்.ஏக்கள் குறித்த கேள்விக்கு, இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கம் ஏற்கனவே பதில் அளித்து விட்டது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் உரையில் நிதிக்குழு குறித்த நிதியமைச்சரின் கவனிக்கத்தக்க பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.