சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 83 வயது மூதாட்டி ஒருவர் முன்பு கரோனா அறிகுறியுடன் சேர்க்கப்பட்டார். மேலும் அவருடன் அவரது மருமகன் உள்பட இரண்டு நபர்கள் கரோனா அறிகுறியுடன் சேர்க்கப்பட்டனர்.
ஏற்கனவே சில நாள்களுக்கு முன்னர் 83 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 15) அவருடன் சேர்க்கப்பட்ட அவருடைய மருமகன் மற்றும் மேலும் இருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இவர்களை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, கண்காணிப்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் வாழ்த்தி அனுப்பினர்.
இதையும் படிங்க:
வானதியின் மரியாதைக்குள் ஒழிந்திருந்த வன்மம்: 'செருப்பு ராக்கின் மேல் சட்டமேதை'