ETV Bharat / city

வாங்க...வாங்க...சசிகலா, டிடிவி தினகரன், ஈபிஎஸ் உள்ளிட்டோருக்கு ஓபிஎஸ் அழைப்பு...

சசிகலா, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சிக்காக உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அதிமுகவில் இணையலாம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 18, 2022, 2:21 PM IST

Updated : Aug 18, 2022, 4:19 PM IST

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "அதிமுக எம்ஜிஆரால் தொண்டர்களால் தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்டது. எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை அவரை யாராரும் வெல்ல முடியவில்லை. எம்ஜிஆர் மறையும்போது இருந்த 17 லட்சம் உறுப்பினர்களை ஒன்றரை கோடிக்கு மேற்ப்பட்ட தொண்டர் இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார். அவர் 16 ஆண்டு முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக வைத்திருந்தார்.

எங்களுக்குள் சிறிய சிறிய பிர்ச்சனை, கருத்து வேறுபாட்டால், திமுக ஆளும் கட்சியாகும் சூழல் ஏற்பட்டு விட்டது. எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது. அவற்றை மனதில் இருந்து அப்புறப்படுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும். மீண்டும் ஆளும் நிலைக்கு அதிமுக வர வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.

எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை என்றார். ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சிக்கு உரிய எதிர்கட்சியாக மக்கள் விரோத போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் அரசியல் கட்சியாக அதிமுக இருக்கும்.

நான்கரை ஆண்டு காலம் எடப்பாடியுடன் பயணித்தோம். மீண்டும் அந்த நிலை வரவேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்கை.
தர்மயுத்தத்தின் பிறகு கூட்டுத் தலைமைப்படி, குறையே இல்லாமல் இருவரும் இணைந்து பயணித்தோம்.

சசிகலா, டிடிவி தினகரன், ஈபிஎஸ் உள்ளிட்டோருக்கு ஓபிஎஸ் அழைப்பு

ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவான பிறகு எம்ஜிஆர் எண்ணத்தில் உருவான இயக்கத்தை தலைமை தாங்குவோர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் சட்ட விதிப்படி நடந்தது. இந்திய தேர்தல் ஆணையமும் அதை ஏற்றது.

எங்களது எண்ணம் மற்றும் செயல் எல்லாமே இணைப்பு இணைப்பு இணைப்புதான். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், அவை தொலையட்டும், இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும். கட்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் இணையலாம். யாராக இருந்தாலும் என்ற வார்த்தையில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரனும் இருக்கின்றனர் என்றார்.

இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர்

Last Updated : Aug 18, 2022, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.