ETV Bharat / city

பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறார் - அமைச்சர் கே.பி. அன்பழகன் - துணைவேந்தர்களின் பதவிகாலம் நீட்டிப்பு

பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறார்
ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறார்
author img

By

Published : Jan 21, 2021, 7:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னிச்சையாக செயல்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். தொடர்ந்து பாரதிதாசன், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு பணி கால நீடிப்பு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஆளுநரிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஒய்வு பெற்ற நிலையில், அவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி நீட்டிப்பு வழங்கினார். ஆளுநர் இந்த நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளானது.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம் கேட்டபோது, ”பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு கொடுத்த விவகாரத்தில் ஆளுநர், அரசிடம் எந்தவிதமான கருத்தும் கேட்கவில்லை. அதே நேரத்தில் சமந்தப்பட்ட துணைவேந்தர்களுக்கு பணிக்கால நீடிப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநரிடம், அரசும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இந்த விஷயத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதுபோல பாரதிதாசன், பெரியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு பணிக்கால நீடிப்பு வழங்க வேண்டும் என அரசு ஆளுநரை நிர்பந்திக்கவில்லை” என்று தெரிவித்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் தேர்வு குழு அமைக்கப்பட்டு விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்றன. அதேபோல பல்கலைக்கழகத்தினை நிர்வகிப்பதற்கு கன்வீனர் கமிட்டியும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் துணைவேந்தரின் பதவிக் காலத்தினை தமிழ்நாடு ஆளுநர் ஓராண்டு நீடித்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுக அரசு எல்லா இடத்திலும் ஊழல் செய்துவருகிறது - கனிமொழி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.