ETV Bharat / city

தைப்பூச திருநாளை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது!

தைப்பூச திருநாளை பொதுவிடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தைப்பூச திருநாளை பொது விடுமுறை நாளாக அறிவிப்பு

author img

By

Published : Jan 5, 2021, 9:27 PM IST

சென்னை: தமிழ் மாதத்தின் பத்தாவது மாதமான தை மாதத்தில் வரும் தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜன.5) உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு, தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை நாளாக அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆணையில், இனி வரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருநாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க ஆணையிடப்படுகிறது. இப்பொதுவிடுமுறையானது தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள், அரசினால் அமைக்கப்பட்ட வாரியங்கள் மற்றும் கழகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகள், தொழிற்துறை நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும். பிற நிறுவனங்களும் இவ்விழாவின் சிறப்பினை கருத்தில் கொண்டு தங்களது அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரு அங்குலம் நீர்நிலைப் பகுதிகூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.