ETV Bharat / city

தைப்பூசத் திருவிழா: வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தலைமைச் செயலர் ஆலோசனை! - கரோனா வழிகாட்டு நெறிமுறை

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், 2021 ஜன., 28 ஆம் தேதி நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவின் போது பின்பற்ற வேண்டிய முன்னேற்பாடுகள், கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
தைப்பூசத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
author img

By

Published : Dec 29, 2020, 5:33 PM IST

சென்னை: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 2021ஆம் ஆண்டு ஜன., 28ஆம் தேதி தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவின் போது பின்பற்ற வேண்டிய முன்னேற்பாடுகள், கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் இன்று (டிச.29) நடைபெற்றது.

தைப்பூச தினத்தன்று கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும், பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும், தனிமனித இடைவெளியை எப்படி கடைப்பிடிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் ஆதினம், ஸ்ரீலஸ்ரீ மருதாச்சல அடிகள், நாகப்பட்டினம் மாவட்டம், ஸ்ரீதருமபுர ஆதினம், தென்மண்டல கட்டளை விசாரணை பிரதிநிதி திருஞான சம்பந்த தம்பிரான், பழநி, ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி பக்தர்கள் பேரவையின் மாநில அமைப்பாளர் செந்தில்குமார், பழநி, பாலதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர், சேகர், பழநி, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் செயலாளர் சுவாமிநாதன், பழநி, மணிகண்ட ஐயப்பன் போஜனம் அமைப்பைச் சேர்ந்த, சுமதி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

மேலும், கூடுதல் தலைமைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூடுதல் தலைமைச் செயலர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூடுதல் தலைமைச் செயலர், உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறை, கூடுதல் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கும் உள்ளிட்ட உயர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருச்சியில் கைத்தறி கண்காட்சி விழா தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.