ETV Bharat / city

எலைட் மதுக்கடை பணியாளர்களுக்கு ’கோட் சூட்’! - மதுவிற்பனை

சென்னை: புத்தாண்டு முதல் எலைட் டாஸ்மாக் பணியாளர்களுக்குப் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

tasmac
tasmac
author img

By

Published : Dec 31, 2019, 6:28 PM IST

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின்கீழ் உள்ள டாஸ்மாக் எலைட் மதுக்கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் புத்தாண்டு முதல் புதிய சீருடை வழங்கப்பட உள்ளது. இதன்படி சென்னையில் உள்ள 31 எலைட் மதுக்கடைகளில் பணியாற்றுவோருக்கு ’கோட் சூட்’ வழங்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை தவிர பிற ஊர்களில் உள்ள 52 எலைட் மதுக்கடைக் பணியாளர்களுக்கும் புதிய சீருடை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மது விற்பனையைப் பொறுத்தவரை, கடந்தாண்டை ஒப்பிடும்போது இம்மாத இறுதியில் 243 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மது விற்பனை 130 கோடியாக இருந்தது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து தேர்தல் நடந்த இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் நேற்று மாலைமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. மேலும், நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால் இன்று அதிகளவு மது விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இன்றும் நாளையும் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் நாளையே (2020 ஜனவரி 1 ஆம் தேதி) அதிகளவில் மதுவகைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டு புத்தாண்டின்போது சுமார் 200 கோடி ரூபாய்க்கு மது விற்பனையான நிலையில், வரும் ஆண்டில் கூடுதலாக 50 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படுங்க: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள பெட்லாட் நகரம்!

Intro:Body:
ஆங்கில புத்தாண்டு முதல் எலைட் டாஸ்மாக் பணியாளர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டாஸ்மாக் துறையின் கீழ் உள்ள எலைட் மதுககடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புத்தாண்டு முதல் புதிய சீருடை வழங்கப்பட உள்ளது. இதன்படி சென்னையில் உள்ள 31 எலைட் மதுக்கடைகளில் பணியாற்றுவோருக்கு கோட் சூட் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தவிர பிற ஊர்களில் உள்ள 52 எலைட் மதுக்கடைகளிலும் பணியாளர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டிசம்பர் மாத 30, 31 ஆகிய நாட்களில் ரூ.243 கோடி அளவுக்கு மது விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி மது விற்பனை ரூ.130 கோடியாக இருந்தது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. நாளை புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று அதிகளவு மது விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றும் நாளையும் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் நாளை (1 ஆம் தேதி) அதிகளவில் மதுக்களை வாங்கி இருப்பும் வைத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு புத்தாண்டின் போது சுமார் 200 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை ஆன நிலையில் வரும் ஆண்டில் கூடுதலாக 50 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.