ETV Bharat / city

இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாக, இன்றும் (மார்ச் 27), நாளையும் (மார்ச் 28) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
author img

By

Published : Mar 27, 2022, 2:29 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உள்தமிழ்நாடு பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்றும் (மார்ச் 27), நாளையும் (மார்ச் 28) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மார்ச் 30, 31ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தேக்கடி (தேனி), ராசிபுரம் (நாமக்கல்) தலா 3 செ.மீட்டர், சோலையார் (கோயம்புத்தூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), சந்தியூர் கேவிகே (சேலம்) தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருக்கடையூர் கோயில் குடமுழுக்கு விழா - லட்சக்கணக்காணோர் சாமி தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.